தேசிய செய்திகள்

தோல்வி விரக்தியில் பாஜக வன்முறையில் ஈடுபடுகிறது; கெஜ்ரிவால் தாக்கு

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.அதிலும் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் தான், டெல்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லி

தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது. தோல்வி விரக்தியில் இப்போது வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்..

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து