தேசிய செய்திகள்

அத்வானியுடன் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு

பா.ஜனதாவின் மூத்த தலைவரான அத்வானியை, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நேற்று சந்தித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக சில தினங்களுக்கு முன்பு ஜே.பி.நட்டா பொறுப்பேற்றார். இந்த நிலையில் நேற்று அவர் கட்சியின் முன்னாள் மற்றும் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில், அத்வானியின் ஆசீர்வாதம் கிடைத்தது. அவர் கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார். அவருடைய ஆசீர்வாதங்களுடன் பா.ஜனதாவை மேலும் வலுப்படுத்த நான் அயராது உழைப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்