பிரதாப்கார்,
உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் ராமமூர்த்தி திரிபாதி, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானார். அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91.
அவரது மறைவுக்கு பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.