புதுடெல்லி
பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இமயமலை சென்றிருந்தார். வீடு திரும்பிய பின்னர் காய்ச்சல் அதிகமாக இருந்தாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்த போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், தனது ஓட்டுநருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனக்காக கவலைப்படுபவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.