காந்திநகர்,
குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கானஓட்டுஎண்ணிக்கைஇன்றுகாலை 8 மணிக்கு தொடங்கியது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில், குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாரதீய ஜனதா கட்சி 22 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
இதேபோன்று இமாசல பிரதேச சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாரதீய ஜனதா கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
இந்த நிலையில், 9 மணி நிலவரப்படி, குஜராத்தில் பாரதீய ஜனதா 90 இடங்களிலும், காங்கிரஸ் 58 இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
இதேபோன்று இமாசல பிரதேசத்தில் பாரதீய ஜனதா 16 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.