தேசிய செய்திகள்

கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தல்; தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் பாரதீய ஜனதா முன்னிலை

உத்தர பிரதேசத்தில் கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலுக்கான தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் பாரதீய ஜனதா முன்னிலை பெற்றுள்ளது. #BJP #LokSabhaBypolls

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ந்தேதி நடந்து முடிந்தது. கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் மற்றும் பூல்பூர் தொகுதியில் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் பதவி விலகினர். யோகி உத்தர பிரதேச முதல் அமைச்சராகவும் மற்றும் கேசவ் துணை முதல் அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

கோரக்பூரில் 47.45 சதவீதமும், பூல்பூரில் 37.39 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

இதில், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் பாரதீய ஜனதா கட்சி இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்