இந்தநிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று சட்டசபையில் பேசினார்.
அவர் பேசியதாவது:-
மத்தியில் உள்ள பா.ஜனதா தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னரை பா.ஜனதாவினர் பேச அனுமதித்து இருக்க வேண்டும். நான் ராஜ்நாத்சிங் முதல் சுஷ்மா சுவராஜ்வரை எத்தனையோ பா.ஜனதா தலைவர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போதைய பா.ஜனதா மாறுபட்டது. இந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கலாசாரம், நாகரிகம், மரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.
இவ்வாறு அவர் பேசினார்.