தேசிய செய்திகள்

அமேதி தொகுதியில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் வினியோகம் - இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரியங்கா புகார்

அமேதி தொகுதியில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா கட்சியினர் பணம் வினியோகிப்பதாக, இறுதிக்கட்ட பிரசாரத்தில் பிரியங்கா புகார் தெரிவித்தார்.

தினத்தந்தி

அமேதி,

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் போட்டியிடுகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) அங்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.

அந்த தொகுதியில் உள்ள பிரதான்ஸ் கிராமத்தில் பிரியங்கா காந்தி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கிவருகிறது. ஆனால் மற்றொரு புறம் பா.ஜனதா கட்சி வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.

அமேதி மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள் என்பது பா.ஜனதாவுக்கு தெரியாது. பல ஆண்டுகளாக அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பை பா.ஜனதா கட்சியால் ரூ.20 ஆயிரம் கொடுத்து தடுத்துவிட முடியாது. அமேதி மக்கள் தங்களை ரூ.20 ஆயிரத்துக்கு விற்றுவிடுவார்கள் என பா.ஜனதா கருதுவது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் நேரு-காந்தி குடும்பத்தின் அன்பையும், அரவணைப்பையும் சம்பாதித்து இருக்கிறார்கள். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்