புதுடெல்லி,
பாஜக எம்.பி வருண் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது சொந்த மக்களவை தொகுதியான பிலிபட் சென்று வந்த பிறகு தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக வருண் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தொற்று பாதிப்பின் அறிகுறிகள் சற்று கடுமையாகவே உள்ளதாக வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், தொற்று பரவலுக்கு மத்தியில் தேர்தலும் நடப்பதால், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் களப்பணியில் ஈடுபடுவர்களுக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் போட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருண் காந்தி வலியுறுத்தியுள்ளார்.