தேசிய செய்திகள்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று செலுத்திக்கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 முதல் 59 வயதுள்ளவர்களில் நோய்த்தொற்று அபாயம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெறுகிறது.

இந்த நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று டெல்லியில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். அவருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 2.26 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்