தேசிய செய்திகள்

பாஜகவில் இணைந்தால் ரூ.30 கோடி ஆசை வார்த்தை, மகளிர் காங்கிரஸ் தலைவி குற்றச்சாட்டு

பாஜகவில் இணைந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி தருவதாக அக்கட்சி கூறியதாக கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பால்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூர்

கர்நாடக மாநில பெலகாவியில் மகளிர் காங்கிரஸ் தலைவி லட்சுமி ஹெப்பால்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அண்மையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க முற்பட்ட பாஜகவினர் பலர் என்னை தொடர்பு கொண்டு, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறியிருந்தனர். அப்போதுதான் ஹைதராபாத்தில் இருந்தேன். தொலைபேசி மூலமாக பாஜக தலைவர்களை பேசியதை பதிவுசெய்து, அதை காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் காட்டினேன்.

பாஜகவினர் என்னை அவர்கள் கட்சிக்கு இழுக்க மேற்கொண்ட முயற்சிகளைத்தான் கூற விரும்புகிறேன். காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுத்து கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக செய்த சதியை பகிரங்கப்படுத்த விரும்பினேன். பாஜகவினரின் ஆசை வார்த்தைகளுக்கு நான் இணங்காததோடு, எந்த சூழலிலும் காங்கிரஸ் கட்சியை விட்டுவிலக மாட்டேன் என்று அவர்களிடம் கூறியிருந்தேன் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்