தேசிய செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அலுவலகத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர்.

தினத்தந்தி

ஜாம்ஷெட்பூர்,

ஜார்கண்ட் மாநிலம் குந்தி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அர்ஜுன் முண்டாவின் தேர்தல் அலுவலகம், கார்சவான் நகரில் உள்ளது. அந்த அலுவலகத்துக்குள் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் 4 பேர் புகுந்தனர். அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 டிரைவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

பின்னர், வெடிகுண்டை பொருத்தி, அதை வெடிக்கச் செய்தனர். இதில், அலுவலகத்தின் பின்பக்க சுவர் சேதமடைந்தது. தகவல் அறிந்து போலீசார் வந்தபோது, 100 மீட்டர் ஒயர்கள், ஒரு டெட்டனேட்டர், மாவோயிஸ்டு துண்டு பிரசுரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை