தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்; 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

நாடாளுமன்ற தேர்தலுக்கான 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.

இதேபோன்று நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் அடங்கிய மற்றொரு பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது. இதில் தெலுங்கானாவின் 6 வேட்பாளர்கள், உத்தர பிரதேசத்தின் 3 வேட்பாளர்கள், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு வேட்பாளர் பற்றிய பெயர் பட்டியலை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவு செய்து வெளியிட்டது.

இவற்றில் தெலுங்கானாவில் 2 தனி தொகுதிகளும், உத்தர பிரதேசத்தில் 2 தனி தொகுதிகளும் உள்ளன.

தெலுங்கானாவில் அடிலாபாத் (தனி) தொகுதியில் சோயம் பாபு ராவ், பெடப்பள்ளி (தனி) தொகுதியில் எஸ். குமார், ஜாஹீராபாத் தொகுதியில் பனல லட்சும ரெட்டி, ஐதராபாத் தொகுதியில் டாக்டர் பகவந்த் ராவ், செல்வெல்லா தொகுதியில் பி. ஜனார்தன ரெட்டி, கம்மம் தொகுதியில் வாசுதேவ ராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் கே. சுரேந்திரன், உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் பிரதீப் சவுத்ரி, நாகினா (தனி) தொகுதியில் டாக்டர் யஷ்வந்த், புலந்த்சாஹர் (தனி) தொகுதியில் போலா சிங் ஆகியோரும், மேற்கு வங்காளத்தின் ஜாங்கிபூர் தொகுதியில் மபூஜா கத்தூன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு