தேசிய செய்திகள்

பொது சிவில் சட்டம் அமல்படுத்துவோம்; இமாசல பிரதேசத்தில் பாஜக தேர்தல் அறிக்கை

68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் வரும் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

ஷிம்லா,

68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் வரும் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் இமாசல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பாஜக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஒருபக்கம் காங்கிரசும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் அங்கு தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

இதனிடையே, இமாசல சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டும் போன்ற வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்