புதுடெல்லி
ம.பி, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்திஸ்கர், உ.பி என பல மாநில அரசுகள் மோடி அரசின் மூன்றாண்டு நிறைவைக் கொண்டாட ஏராளமான பணத்தை தண்ணீராக செலவிடுகின்றன. இந்தத்தொகை ரூ 2000 கோடி வரையிலும் கூட இருக்கலாம் என்றார் அவர்.
பாஜகவிடமிருந்து இப்பணம் வசூல் செய்யப்பட வேண்டும் என்றார் அவர். இப்படி பணத்தை செலவிடும் அரசுகள்தான் பள்ளிகள், மருத்துவமனைகளை மூடுகின்றன. மருந்து, மாத்திரைகள் இல்லையென்று கூறுகின்றன என்றார் அவர். ஆம் ஆத்மி அரசு விளம்பரத்திற்கு ஏராளமாக செலவு செய்வதாக கூறி அமைக்கப்பட்ட கமிட்டியிடம் இந்த வீணடிப்புக் குறித்து புகார் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியிடமும் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.