கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பஞ்சாப்: 117 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும் - அஸ்வினி சர்மா

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும் என்று மாநில தலைவர் அஸ்வினி சர்மா அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

லூதியானா,

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு (2022) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில் லூதியானாவில் நேற்று நடந்த பா.ஜனதா தொண்டர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய மாநில பா.ஜனதா தலைவர் அஸ்வினி சர்மா, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் பா.ஜனதா சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என கூறினார்.

பஞ்சாப்பில் முதல்-மந்திரி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்து, காங்கிரசில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள அமரிந்தர் சிங், புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்து இருந்தார். அத்துடன் தனது புதிய கட்சி பா.ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் எனவும் கூறியுள்ளார். இந்த சூழலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்