தேசிய செய்திகள்

பா.ஜ.க. தொண்டர்களை வண்டி ஏற்றி கொல்ல முயன்ற திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவி

பா.ஜ.க. தொண்டர்கள் மீது வண்டி ஏற்றி கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

அகர்தலா,

திரிபுராவில் நடந்த பா.ஜ.க. பொது கூட்டம் ஒன்றில் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். இந்த நிலையில், அவர்கள் மீது வாகனம் ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது.

இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், மேற்கு திரிபுராவின் கூடுதல் எஸ்.பி. பி.ஜே. ரெட்டி கூறும்போது, திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவி சாயோனி கோஷ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதுபற்றிய முதற்கட்ட சான்று கிடைத்து உள்ளது. இதனால், கோஷ் மீது 307, 153 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அகர்தலா போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை