தேசிய செய்திகள்

சோனியா மன்னிப்பு கேட்க பா.ஜனதா வலியுறுத்தல்

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து பா.ஜனதா, பஜ்ரங்தள் அமைப்பினர் பணம் பெறுகின்றனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியிருந்தார். அதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறியதாவது:-

திக்விஜய் சிங்கின் கருத்து, காங்கிரசின் மனநிலை பிறழ்ந்து விட்டதையே காட்டுகிறது. அப்படியானால், ஜாகீர் நாயக், அமைதி தூதரா? இத்தகைய கருத்துகள், பாகிஸ்தானில் தலைப்பு செய்தி ஆகின்றன. பாகிஸ்தானுக்கு ஆக்சிஜன் அளிக்கும் வேலையை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

ஹபீஸ் சயீத்தையே சயீத்ஜி என்று அழைத்தவர்கள்தான் காங்கிரசார். ஆகவே, திக்விஜய் சிங் கருத்துக்காக சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை