தேசிய செய்திகள்

கோவாவில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் - முதல்-மந்திரி பிரமோத் சாவந்த்

கோவாவில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

இதற்கிடையில், 2022 சட்டமன்றத் தேர்தல்லிற்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. அதில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 16 இடங்களை வெல்லும் . இழுபறி நிலைமை உருவாகலாம் என்று கருத்து கணிப்புகள் வெளிவந்தன.

இந்த நிலையில், கருத்து கணிப்புகள் குறித்து முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாளை சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. கோவாவில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். காங்கிரஸுக்கு ஏன் இவ்வளவு கவலை என்று தெரியவில்லை. அவர்கள் தங்கள் வேட்பாளர்களை நம்பவில்லையா? அல்லது யார் வெற்றி பெறுகிறார்கள் என்று தெரியாமல், வேட்பாளர்களை தனிமையிலும் அழுத்தத்திலும் வைத்திருக்கிறார்கள் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்