தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய்: அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்தது ஒடிசா அரசு

ஒடிசா அரசு கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்து உள்ளது.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

இதன்படி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்துள்ளது. இந்த சூழலில் ஒடிசா அரசு, தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்து உள்ளது.

இதன்படி, மாநிலத்தில் யாருக்கேனும் கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், அதற்குரிய சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க, அவர்கள் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு