தேசிய செய்திகள்

பெங்களூருவில் மிராஜ் 2000 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள் சிக்கியது என தகவல்

பெங்களூருவில் மிராஜ் 2000 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள் சிக்கியது என தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் விமான நிலையத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி பயிற்சி விமானமான மிராஜ் 2000 விபத்துக்குள்ளானது. விமானம் விபத்தில் சிக்கியபோது உடனடியாக விமானிகள் இருவரும் வெளியே குதித்து தப்பிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்குள் தீப்பற்றிக்கொண்டது. இதில் இரு விமானிகள் உயிரிழந்தனர். இருவரும் தொழில்நுட்பம் மற்றும் சோதனைப்பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய விமானத்தின் பிளாக் பாக்ஸ் தரவுகள், விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்தில் சிக்கியது என தெரிகிறது என தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விமானிகளின் தவறு காரணமாக விபத்தில் சிக்கவில்லை, சென்சார் தொடர்பான தொழில்நுட்பம் செயல் இழப்பை காட்டுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை