image courtesy: ANI 
தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசம்: படகு கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

உத்தரப்பிரதேசம் குஷிநகரில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

குஷிநகர்,

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நேற்று காலை குஷிநகர் மாவட்டத்தின் கடா பகுதிக்கு அருகிலுள்ள நாராயணி ஆற்றில் இந்தச் சம்பவம் நடந்தது. 10 பேர் படகில் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பெண்கள், ஒரு இளைஞர் என 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் மீட்கப்பட்டு கடாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்