தேசிய செய்திகள்

கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து;இருபதுக்கும் மேற்பட்டோர் மாயம்

உத்தரபிரதேசத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது இருபதுக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளனர். இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

பல்லியா

உத்தரபிரதேசம் பல்லியாவில் பெரும் படகு விபத்து ஏற்பட்டது. இங்கு முண்டன் சன்ஸ்காரத்தின் போது, கங்கை நதியின் மால்தேபூர் காட் பகுதியில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த படகில் சுமார் 40 பேர் பயணித்ததாக பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவிதுள்ளார்.

அதிக பாரம் ஏற்றியதால் படகு கவிழ்ந்து உள்ளது. இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் மீட்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளனர். 20 முதல் 25 பேர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்