ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முடல்ஹமா பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் சலீம் ஷா என்பவர் விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். அவரை நேற்றிரவு தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சலீமின் குண்டுகள் துளைத்த உடல் வயல்வெளியில் இருந்து இன்று மாலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்த கான்ஸ்டபிளை கொன்ற தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த மாதம் அவுரங்கசீப் என்ற போலீசார் ஈத் பண்டிகையை கொண்டாட வீட்டிற்கு செல்லும் வழியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.