தேசிய செய்திகள்

மிஸ்டர் இந்தியா பட்டத்தைப் பெற்ற ஆணழகன் தற்கொலை முயற்சி

2016 ஆம் ஆண்டில் இந்திய பாடி பில்டர்ஸ் பெடரேஷனின் (ஐபிபிஎப்) மிஸ்டர் இந்தியா பட்டத்தை மனோஜ் பாட்டீல் வென்று உள்ளார்.

மும்பை

மிஸ்டர் இந்தியா பட்டத்தைப் பெற்ற ஆணழகன் மனோஜ் பாட்டீல், சமீபத்தில் ஓஷிவாராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்த்து இப்போது நல்ல நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

29 வயதான பாட்டீல் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மயக்க நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அங்கு அவருக்கு சிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கூப்பர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் இது குறித்து கூறும் போது பாட்டீல் சுயநினைவு பெற்று, நல்ல நிலையில் உள்ளார். அவர் என்ன உட்கொண்டார் என்பதை அறிய அவரது உடலில் இருந்து மாதிரிகள் எடுத்துள்ளோம். அவரது உடல்நிலை குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நாங்கள் தகவல் அளித்துள்ளோம் என கூறினார்.

2016 ஆம் ஆண்டில் இந்திய பாடி பில்டர்ஸ் பெடரேஷனின் (ஐபிபிஎப்) மிஸ்டர் இந்தியா பட்டத்தை பாட்டீல் வென்று உள்ளார்.சமீபத்தில் நடிகர் சாஹில் கான் (2001 திரைப்படம் 'ஸ்டைல்') மீது ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில்ப் ஒரு புகார் அளித்து இருந்தார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு