தேசிய செய்திகள்

மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்; போலீசார் தகவல்

மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியே மிரட்டல் வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியேயான அழைப்பில் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி மும்பை போலீசார் கூறும்போது, மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுகுவில் உள்ள பி.வி.ஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஓட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என போலீசாருக்கு தொலைபேசி வழியே மிரட்டல் தகவல் வந்து உள்ளது.

இந்த மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு முகமைகள் ஈடுபட்டு உள்ளன என தெரிவித்து உள்ளனர். மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அதன் நினைவு தினம் இன்னும் ஒரு சில நாட்களில் வரவுள்ளது. இந்த சூழலில் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது