தேசிய செய்திகள்

மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் - கண்காணிப்பு தீவிரம்

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மங்களூரு விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு சர்வதேச விமான நிலையம் உள்பட பல்வேறு விமான நிலையங்களுக்கு கடந்த மாதம் 29-ந்தேதி மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். குறிப்பாக மங்களூரு விமான நிலையத்தில் 3 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எச்சரிக்கையை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பாஜ்பே காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், மங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம் முழுவதும் பல்வேறு அடுக்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு