தேசிய செய்திகள்

டெல்லி தலைமை செயலகம், சட்டமன்றத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படாத்தால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, டெல்லியில் 2 பள்ளிகளுக்கும் இன்று போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.