இம்பால்,
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் சட்டசபை வளாகம் அருகே நேற்று பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். வளாகத்தின் முன்பக்க நுழைவுவாயிலுக்கு வெளியே இந்த குண்டு வீசப்பட்டது. கையெறி குண்டு சிதறல்கள் பட்டதால், சட்டசபை வளாகத்தில் காவல் பணியில் இருந்த 2 மத்திய ரிசர்வ் படை போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.