தேசிய செய்திகள்

பட்ஜெட் ரெயில்வேயில் மும்பை மற்றும் பெங்களூருக்கு அடித்தது ஜாக்பாட்! தமிழகம் ஏமாற்றம்

மும்பை புறநகர் ரெயில் நெட்வோர்க்கை விரிவுப்படுத்தப்படும் அறிவிப்பை நிதிமந்திரி அருண் ஜெட்லி வெளியிட்டு உள்ளார். #UnionBudget2018 #Mumbai #Bengaluru

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 465 கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து உள்ள மும்பை புறநகர் ரெயில் நெட்வோர்க் விரிவுப்படுத்தப்படும், அதற்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மும்பை ரெயில்வே நெட்வோர்க்கிற்கு ரூ. 40 ஆயிரம் கோடியை ஒதுக்கவும் மத்திய அரசு திட்டம் கொண்டு உள்ளது என ஜெட்லி அறித்து உள்ளார். மும்பை போக்குவரத்து சிஸ்டம், நாட்டின் உயிர்நாடியாகும். அது விரிவுப்படுத்தப்படும். ரூ. 11000 கோடி செலவில் 99 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரட்டை ரெயில் பாதையுடன் விரிவுப்படுத்தப்படும்,என்றார் அருண் ஜெட்லி.

ரூ. 40 ஆயிரம் செலவில் புறநகர் பகுதியில் பறக்கும் ரெயில் கட்டமைப்பு உள்பட 150 கிலோ மீட்டர் தொலைவிற்கு கூடுதலாக ரெயில்வே நெட்வோர்க்கை அமைக்கவும் திட்டமிடப்படுகிறது எனவும் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார்.

மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பை மக்களே கொண்டாடுங்கள், என டுவிட் செய்து உள்ளார்.

மும்பை புறநகர் பகுதியில் 2,342 ரெயில்கள் இயக்கப்படுகிறது, நாளொன்றுக்கு 7.5 மில்லியன் மக்கள் பயணம் செய்கிறார்கள். முதல் முறையாக ரெயில்வே நெட்வோர்க் அங்கு விரிவுப்படுத்தப்படுகிறது.

இவ்வருடத்தில் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவின் புறநகர் ரெயில் நெட்வோர்க்கிற்கு ரூ. 17000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநில அமைச்சரவை பெங்களூரு புறநகர் ரெயில்வே திட்டத்தின் முதல்கட்ட பணியை அடுத்த மூன்று ஆண்டுகளில் முடிக்க ஒப்புதல் வழங்கியதை அடுத்து ரெயில் சேவை விரிவாக்கத்திற்கு ஜெட்லில் ரூ. 17 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளார். இத்திட்டமானது கர்நாடக மாநில அரசு மற்றும் இந்திய ரெயில்வே இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. மொத்த செலவில் 20 சதவிதமான 349 கோடியை கர்நாடக மாநில அரசு கொடுக்கும். பெங்களூரு பெருநகர வளர்ச்சியைப் பூர்த்தி செய்யயும் வகையில் ரூ. 17 ஆயிரம் கோடி செலவில் 160 கிலோ மீட்டர் தொலைவில் புறநகர் ரெயில் நெட்வோர்க்கிற்கு திட்டமிடப்பட்டு உள்ளது என ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார்.

பெங்களூரு நெட்வோர்க்கை சேர்ந்த ரெயில்வே அதிகாரி பேசுகையில் இப்போது 58 ரெயில்கள் 116 ரெயில்வே சேவையை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ரெயிலிலும் 1,800 முதல் 2000 வரையிலான பயணிகள் பயணம் செய்ய முடியும்.

பட்ஜெட்டில் ரெயில்வே தொடர்பாக தமிழகத்தில் எதிர்பார்க்கப்பட்டவை:-

மெட்ரோ ரெயில் இரண்டாவது கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு.

சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே சரக்கு ரெயில் பாதை அமைப்பு.

சென்னை - மதுரை- கன்னியாகுமரி இடையேயும், மதுரை - கோவை இடையேயும் பயணிகள் ரெயில் திட்டம் ஆகிய திட்டங்கள் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை