புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா மிகத்தீவிரமாக பரவி வருகிறது. மேலும் மருந்து மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகள், உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் தேதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 2வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான தேதியை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி காலம் 90 நாட்கள் என அதிகரிக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.