தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை

மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் மெட்ரோ ரெயிலில் பயணித்து ரெயில் நிலையத்துக்கு வெளியே வரும் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு ஆட்டோக்களை தேடுகின்றனர். ஆனால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பெரும்பாலான ஆட்டோக்கள் பயணிகள் கூறும் இடத்துக்கு வருவதும் இல்லை. இதை கருத்தில் கொண்டு முன்பதிவு ஆட்டோ சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் பெங்களூரு போக்குவரத்து போலீசாரிடம் பேசியிருப்பதாகவும், அதற்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அனைத்து அனுமதியும் கிடைத்தவுடன் விரைவில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை தொடங்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஷ் தெரிவித்துள்ளார். 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்