தேசிய செய்திகள்

குஜராத்தில் கூடுதலாக 7 மீன்பிடி படகுகளை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படை

குஜராத்தில் கூடுதலாக 7 மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத்தின் பூஜ் நகரில் ஹராமி நல்லா பகுதியில் கடந்த 9ந்தேதி 11 மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) கைப்பற்றினர். அந்த படகுகளில் இருந்த 6 பாகிஸ்தானிய மீனவர்களையும் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையில் இந்திய விமான படை மற்றும் ராணுவ வீரர்களின் உதவியுடன் பி.எஸ்.எப். வீரர்கள் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குஜராத்தின் பூஜ் நகரில் ஹராமி நல்லா பகுதியில் நேற்று (வியாழ கிழமை) 7 மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். அந்த படகுகளில் இருந்த அழுகிய மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு