தேசிய செய்திகள்

எல்லை பாதுகாப்பு படை வீரருடன் 35 ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் விழுந்த துப்பாக்கி மீட்பு

எல்லை பாதுகாப்பு படை வீரருடன் 35 ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் விழுந்த துப்பாக்கி மீட்கப்பட்டது.

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் கோமதி ஆற்றில் 1984-ம் ஆண்டு ஒரு படகு கவிழ்ந்ததில் துணை ராணுவ வீரர் ஒருவர் பலி ஆனார். அவரது உடல் அப்போது மீட்கப்பட்டு விட்டது. ஆனால் அவர் பணியின் நிமித்தமாக வைத்திருந்த சிறிய ரக துப்பாக்கி கிடைக்கவே இல்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிஸ்வாஜித் தேவ்நாத், கவுதம் சிங் என்ற 2 இளைஞர்கள் கோமதி ஆற்றங்கரை பகுதியில் விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோமதி ஆற்றங்கரையோரம் ஒரு சிறிய ரக துப்பாக்கி கிடப்பதை பார்த்தனர்.

இது குறித்து அவர்கள் உடனடியாக போலீசாரிடமும், எல்லை பாதுகாப்பு படையினரிடமும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனே விரைந்து வந்து அந்த துப்பாக்கியை கைப்பற்றினர்.

மேலும், 1984-ம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படை வீரருடன் ஆற்றில் மூழ்கிய துப்பாக்கியைப் போன்று இந்த துப்பாக்கியும் இருப்பதாக கருதுகின்றனர். இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்