தேசிய செய்திகள்

நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு நாளை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான கிட்டத்தட்ட 4 மணி நேர விவாதத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் சாதகமான முடிவை அறிவித்தன.

இந்நிலையில் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு, நாளை காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மக்களவைவும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்