தேசிய செய்திகள்

ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரி கைது

ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி மகாதேவபுரா மண்டலத்தில் வருவாய் துறை அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நடராஜ். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு பட்டா பெற விண்ணப்பம் செய்திருந்தார். இதற்காக அவர் நடராஜை சந்தித்து பேசினார். அப்போது குடியிருப்புக்கான பட்டா வழங்க வேண்டும் என்றால் ரூ.8 லட்சம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுபற்றி லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். அப்போது லோக் அயுக்தா போலீசார் அவருக்கு சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த நபர், லோக் அயுக்தா போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய ரூ.5 லட்சத்தை முன்பணமாக நடராஜை சந்தித்து கொடுத்தார்.

அதை நடராஜ் வாங்கினார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார், நடராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இடைத்தரகராக செயல்பட்ட பவன் என்பவரையும் லாக் அயுக்தா போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து