புதுடெல்லி,
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி அரவிந்தகுமார் முன்னிலையிலான அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றப்பதிவு மீதான வாதங்கள் வருகிற 26-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்த நீதிபதி அந்த தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.