புதுடெல்லி,
கேரளத்தில் கனமழை காரணமாக திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம் உள்பட மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல ஆறுகள் அபாயகரமான நிலையை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சகோதர, சகோதரிகள் கவனமாக இருங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கேரளாவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழையில் தவித்து வருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் எல்லா வகையிலும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். கேரள சகோதர, சகோதரிகள் கவனமாக இருங்கள் மற்றும் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள்என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.