தேசிய செய்திகள்

ஜம்முவில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

ஜம்முவின் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.#BSF

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்முவின் ஆர்.எஸ். புரா பிரிவில் அமைந்த எல்லை பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் பாகிஸ்தான் படையினர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்காக கொண்டு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதற்கு பதிலடியாக எல்லை பாதுகாப்பு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் படை ஆர்னியா பகுதி மற்றும் பல்வேறு கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் இந்த தொடர்ச்சியான அத்துமீறிய தாக்குதலை கருத்தில் கொண்டு தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

#BSF #jawan #Jammu

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்