தேசிய செய்திகள்

சொகுசு ஓட்டலில் துப்பாக்கியை காட்டி ஜோடியை மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மகன் போலீசில் சரண்

சொகுசு ஓட்டலில் துப்பாக்கியை காட்டி ஜோடியை மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மகன் போலீசில் சரண் அடைந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

புதுடெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் முன்னதாக துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ராகேஷ் பான்டேவின் மகன் ஆஷிஷ் பான்டே மீது டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. சமூக வலைதளங்களில் வெளியான விடியோவின் அடிப்படையின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாயமான ஆஷின் பான்டேவை கைது செய்வது தொடர்பாக நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

வீடியோ வெளியானதும் மத்திய உள்துறை இணை அமைச்சா கிரண் ரிஜிஜூ தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இச்சம்பவம் தொடாபாக டெல்லி காவல் துறையினா நடவடிக்கை எடுத்து வருகின்றனா. இந்த விவகாரம் ஊடகங்களிலும் காட்டப்பட்டு வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம், ஆயுத சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடுமையான மற்றும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், மற்றவாகளின் அடையாளம் குறித்த விவரம் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.

போலீசார் ஆஷிஷ் பான்டேவை வலைவீசி தேடிய நிலையில் இப்போது போலீசில் சரண் அடைந்துள்ளார். துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக என்னை ஒரு பயங்கரவாதியை போன்று சித்தரிக்கிறார்கள், என்னுடைய தரப்பில் எந்தஒரு தவறும் கிடையாது. தவறாக நடந்துக்கொண்டது யாரென்று சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தால் தெரியும். எனக்கு நீதித்துறையின் மீது முழு நம்பிக்கையுள்ளது. எனவேதான் போலீசில் சரண் அடைந்துள்ளே என கூறியுள்ளார் ஆஷிஷ் பான்டே.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்