தேசிய செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் - பிரதமர் மோடி

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

2022ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள பட்ஜெட் நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும்.பட்ஜெட் கூட்டத்தொடர் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் . அனைத்து எம்.பிக்களையும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு வரவேற்கிறேன்.

இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியாவிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த அமர்வு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து உலகிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது

அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாதிக்கிறது.இந்த அமர்வை நாம் எவ்வளவு பயனுள்ளதாக ஆக்குகிறோமோ, அது அந்த ஆண்டின் பிற்பகுதியில் நாட்டைப் பொருளாதார உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவான ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டு நாட்டை விரைவான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்