தேசிய செய்திகள்

2021-22 பட்ஜெட் : "மக்களைப் பற்றி கவலைப்படாத பட்ஜெட் ”: ப. சிதம்பரம்

முன்னெப்போதும் இல்லாத வகையில் இது மக்களைப் பற்றி கவலைப்படாத பட்ஜெட் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில்இன்று தாக்கல் செய்தார்.

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது:-

"முன்னெப்போதும் இல்லாத வகையில் இது மக்களைப் பற்றி கவலைப்படாத நிதிநிலை அறிக்கை. நிதிநிலை அறிக்கை உரையைக் கேட்பவர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றியுள்ளார்.

குறிப்பாக பல்வேறு பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்திருப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர் மக்களை ஏமாற்றியுள்ளார். குறிப்பாக ஏழைகள், உழைக்கும் வர்க்கத்தினர், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் எந்தக் குறைப்பும் இடம்பெறவில்லை எதிர்பார்த்ததைப்போல் தேர்தல் வரவுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அந்த அறிவிப்புகள் ஒதுக்கீடாகவே உள்ளன. அவை திட்டங்களாக மாற ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுக்கும் என கூறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்