படம்: PTI 
தேசிய செய்திகள்

இந்த பட்ஜெட் என்பது பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

இந்த பட்ஜெட் என்பது பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட் என மாநிலங்களவையில் உரையாற்றிய ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

தினத்தந்தி

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உரையாற்றும் போது கூறியதாவது:-

2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தோல்வியுற்றது, ஏனெனில் ஏழைகளுக்கு ஒரு சிறிய அளவு பணப் பரிமாற்றம் கூட வழங்கப்படவில்லை,ரேஷன்கள் தொடரப்படவில்லை.பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட் .

உலகின் ஒவ்வொரு பொருளாதார வல்லுனரும் நாம் தேவையைத் தூண்ட வேண்டும் என்றும், தேவையைத் தூண்டுவதற்கான சிறந்த வழி மக்களின் கைகளில் பண புழக்கத்தை அதிகரிப்பதாகும் என்றும் கூறியுள்ளனர். இந்த அரசாங்கம் அந்தக் கணக்கில் தோல்வியுற்றது.

நான் குற்றச்சாட்டை மீண்டும் சொல்கிறேன். நீங்கள் இன்னும் பாடங்களைக் கற்கவில்லை கடந்த 36 மாதங்களில். நீங்கள் பாடங்களைக் கற்காததன் விளைவாக, இன்னும் 12 மாதங்கள் இழக்க வேண்டி இருக்கும். ஏழைகள் பாதிக்கப்படுவார்கள், பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்.

கொரோனாவில் 6.40 கோடி மக்கள் வேலையிழந்துவிட்டார்கள். பெண்களில் 22 சதவீதம் பேருக்கு வேலையில்லை. 2.80 கோடி மக்கள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். சிறுகுறு, நடுத்தர தொழில்கள் பல மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் தேவையின் பகுதி குறைந்து வருகிறது. வளர்ந்த மாநிலங்களான தமிழகத்திலேயே தேவையில் பற்றாக்குறை என்றால், பிற்படுத்தப்பட்ட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பிகார், ஒடிசாவில் கற்பனை செய்து பாருங்கள். மொத்த தேவையை நீங்கள் புறக்கணித்துவிட்டார்கள். நீங்கள் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கானது.

முதலீட்டுச் செலவு ரூ.51 ஆயிரம் கோடி என்றால் மற்ற பணம் எங்கு சென்றது. வருவாயின் பகுதியில் அரசின் செலவு ரூ.4 லட்சம் கோடிக்கு அதிகமாக இருக்கிறது. ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் பற்றாக்குறை இருக்கிறது. என்னுடய வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள், அடுத்த ஆண்டு வருவாயிலும் பற்றாக்குறை இருக்கும்.

மூன்று வருட திறமையற்ற பொருளாதார முறைகேடை நாடு கண்டு உள்ளது.

இந்த பட்ஜெட் என்பது பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட். தேசத்தில் உள்ள ஏழைகளுக்காக, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, ரேஷன் பொருட்களுக்காக காத்திருக்கும் மக்களுக்காக ஏதும் இல்லை.

இந்த நேரத்தில் நம்முடைய கடும் எதிர்ப்பை, போராட்டத்தை பதிவு செய்தாக வேண்டும். ஏனென்றால், எதிர்ப்பாளர்களான எங்களை அந்தோலன்ஜீவி என்று அழைக்கிறார்கள். மக்களின் பட்ஜெட் என நீங்கள் அழைப்பதை மறுக்கிறோம். ஏழைகளுக்கு பணம் கொடுங்கள், ரேஷன் கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது