தேசிய செய்திகள்

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - ஒரு குழந்தை பலி- 10 பேர் படுகாயம்

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கிய 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் பர்ஷ்கானா லஹோரி கேட் அருகில் உள்ள வால்மீகி மந்திர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது. முன்னதாக இரண்டு மாடிக் கட்டிடமாக இருந்த அது பாழடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அங்கு படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் சம்பவ இடத்தில் 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 மீட்புப்பணி குழுக்கள் சம்பவ இடத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மாவட்ட டெல்லி டிஜிபி ஸ்வேதா சவுகான் தெரிவித்துள்ளார்.  

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்