தேசிய செய்திகள்

ஆங்கிலேயா காலத்தில் கட்டப்பட்டது; சிதிலமடைந்து காணப்படும் இரும்பு பாலம்

குடகு அருகே ஆங்கிலேயா காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலம் சிதிலமடைந்து காணப்படுகிறது.

குடகு;

குடகு மாவட்டம் மடிகேரி-ஹாசன் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஐகூரு கிராமத்தில் ஆங்கிலேயர் காலத்தில் ஆட்சி செய்த லூயிஸ் பிரபு கட்டிய இரும்பு பாலம் ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக குடகு மற்றும் ஹாசன் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் இந்த பாலம் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பாலத்தின் தரத்தை ஆய்வு செய்தனர். அப்போது பாலம் சிதிலமடைந்து இருப்பதாகவும், விரைவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

ஆனால் பல மாதங்கள் கடந்தும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் பொதுப்பணித்துறை அந்த நிதி கிடைக்கவில்லை என்று கூறி, பால சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்