தேசிய செய்திகள்

மாட்டு வண்டி ஏரிக்குள் பாய்ந்தது: குழந்தைகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி சாவு

மாட்டு வண்டி ஏரிக்குள் பாய்ந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஹாசன்,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேகவுடா(வயது 55). நேற்று காலை தனது மனைவி சாரதம்மா (50), பேரக்குழந்தைகள் ருச்சிதா (8), துச்சிதா (5) ஆகியோருடன் மாட்டு வண்டியில் உருளைக்கிழங்குகளை ஏற்றிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றுகொண்டு இருந்தார்.

ஒரு குழியில் மாட்டு வண்டி இறங்கியபோது நிலைதடுமாறி அருகே இருந்த ஏரிக்குள் பாய்ந்தது. மாட்டு வண்டியில் சென்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் கிடைத்து விரைந்துவந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்