தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமான ஜவஹர்லால் நேரு வசித்த பங்களா ரூ 1100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது

தினத்தந்தி

டெல்லி, 

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம், ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் 3.7 ஏக்கரில் அமைந்துள்ள இந்த இல்லம், சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ரூ.1,400 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் அல்லாமல், ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

சொத்து மீதான உரிமையை யாரேனும் கோர விரும்பினால், 7 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்களா,  ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் பினா ராணிக்கு சொந்தமாக இருந்த நிலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பங்களாவை வாங்கியது யார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்