ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் வடக்கே பந்திபோரா நகரில் நாக்மார்க் வனப்பகுதியில் இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள் படை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
இதில் பதுங்கு குழி ஒன்றை கண்டறிந்துள்ளது. அதில் இருந்து 2 சீன எறிகுண்டுகள் மற்றும் வேறு சில எறிகுண்டுகளுடன் அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளது.