தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து; 30 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து அங்குள்ள பள்ளத்தில் விழுந்ததில் 30 யாத்ரீகர்கள் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

முசாபர்நகர்,

உத்தரப் பிரதேசத்தில், 50 யாத்ரீகர்களை கொண்ட பேருந்து ஒன்று பிஜ்னூரிலிருந்து ராஜஸ்தானில் உள்ள பாகருக்கு, பின்னா பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் 30 யாத்ரீகர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்ப்படவில்லை.

மேலும், விபத்தில் காயமடந்தவர்களை பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை