தேசிய செய்திகள்

கேரளாவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

கேரள மாநிலம், இடுக்கி அருகே நிகழ்ந்த விபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

இடுக்கி,

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறுக்கு வேனில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, இடுக்கி அருகே பூப்பாறை தொண்டிமலை பகுதியில் சாலை வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் 24 பேர் பயணம் செய்ததாகவும், அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி திருநெல்வேலியைச் சேர்ந்த வள்ளியம்மா (70), சி.பெருமாள் (59), சுதா (20), விஸ்வா (8) ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை